மரணித்த இலக்கிய, ஊடக ஜாம்பான்களுக்கு முக்கியஸ்தர்கள் பலரும் கூடி நீத்தார் நினைவுகள் - நினைவுரை நிகழ்வு
கிழக்கு பிராந்தியத்தில் மரணித்த கலை, இலக்கிய, ஊடக ஆளுமைகளின் நினைவாக மருதம் கலைக்கூடல் ஏற்பாடு செய்திருந்த நீத்தார் நினைவுகள் - நினைவுரை நிகழ்வு நேற்று (28) மாலை சாய்ந்தமருது ரியாளுள் ஜன்னா வித்தியாலய அரங்கத்தில் அமைப்பின் தலைவர் கலைஞர் அஸ்வான் சக்காப் மௌலானா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலைச்சுடர் கலைஞர் சக்காப் மௌலானா பற்றிய நினைவு உரையை ஓய்வு பெற்ற கோட்டக்கல்வி அதிகாரி கலாபூஷணம் ஏ.பீர்முகம்மட் நிகழ்த்தியதுடன் அவர் தொடர்பிலான இரங்கல் கவிதையை மருதம் கலைக்கூடல் பிரதித்தலைவர் கவிஞர் என்.எம். அலிக்கான் நிகழ்த்தினார்.
தொடர்ந்தும் வித்தகர் பன்னூல் ஆசிரியர், சிரேஷ்ட ஊடகவியலாளர் நூருல் ஹக் பற்றிய நினைவு உரையை கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் கவிஞர் சட்டத்தரணி அலறி ஏ.எல்.எம். றிபாஸ் நிகழ்த்தியதுடன் நினைவுக்கவிதையை ஊடகவியலாளரும் அல்- மீஸான் பௌண்டஷன் தவிசாளருமான கவிஞர் கலைமகன் ஹுதா உமர் மற்றும் மருதமுனை ஜமால் ஆகியோர் வழங்கினர். மேலும் கலாபூஷணம் மருதூர் ஏ மஜீத் பற்றிய நினைவு உரையை இலக்கிய செயற்பாட்டாளர் கவிஞர் நவாஸ் சௌபி நிகழ்த்தியதுடன் அவர் தொடர்பிலான நினைவுக்கவிதையை கலாபூஷணம் கே.எம்.ஏ. அஸீஸ் மற்றும் ஊடகவியலாளரும் கவிஞருமான எஸ். ஜனூஸ் வழங்கியதுடன் கவிஞர் யூ.எல். ஆதம்பாபா பற்றிய நினைவு உரையை புத்தசாசன மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் சாய்ந்தமருது பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் எம்.ஐ.எம். அஸ்ரப் நிகழ்த்தினார்
மேலும் அறிவுக் களஞ்சியம் புகழ் அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி பற்றிய நினைவுரையை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன பிரதிப்பணிப்பாளரும், பிறை வானொலி நிலைய கட்டுப்பாட்டாளருமான வஸீர் அப்துல் கையும் மற்றும் பிரபல ஒலி, ஒளிபரப்பாளர் சட்டத்தரணி கவிஞர் ஏ.எம். தாஜ் நிகழ்த்தினார் தொடர்ந்தும் கவிதாயினி கலைமகள் ஹிதாயா றிஸ்வி பற்றிய நினைவு உரையை சிரேஷ்ட ஊடகவியலாளர் கவிதாயினி ஜுல்பிகா செரீப் நிகழ்த்தினார்.
இவர்களுக்கு மேலதிகமாக இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய இளைஞர் அமைப்பாளருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், அரசியல் செயற்பாட்டாளரும் ஓய்வுபெற்ற கல்வியலாளருமான சட்டத்தரணி எம்.சி.ஆதம்பாபா, சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் பிரதித்தலைவரும் கேர் கன்ஸ்ட்ரக்சன் பணிப்பாளருமான ஏ.ஹிபத்துள் கரீம் ஹாஜி, உட்பட கலை,இலக்கிய, ஊடக பிரமுகர்கள், மரணித்தவர்களின் குடும்பத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.