நிந்தவூர் பிரதேச சபையின் 2021 ஜனவரி மாதத்திற்கான 04 வது சபையின் 34 வது கூட்டமர்வு
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபையின் 2021 ஜனவரி மாதத்திற்கான 04 வது சபையின் 34 வது கூட்டமர்வு வியாழக்கிழமை(21) நடைபெற்றது.
நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்ட அமர்வில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் தீர்மானங்களும் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது மத அனுஸ்டானம் இடம்பெற்ற பின்னர் 2020 டிசம்பர் மாத மாதத்திற்கான கூட்டறிக்கை உறுதிப்படுத்தல் 2020 டிசம்பர் மாதத்திற்கான கணக்கறிக்கை உறுதிப்படுத்தல் தவிசாளர் எம் . ஏ . எம் . தாஹிர் உரை இடம்பெற்றன.
பழைய பிரதேச சபைக்கட்டிடம் சம்மந்தமாகவும் இராணுவத்தின் இருப்பு சம்பந்தமாகவும் பூப்பந்தாட்ட அரங்கினை குத்தகைக்கு வழங்குவது சம்பந்தமாகவும் மாகாண நன்கொடை சம்பந்தமாகவும் உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு அது சம்பந்தமாக ஆலோசனை பெறப்பட்டது.
மேலும் சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வடிகான்களுடைய மூடிகள் இடுவது சம்பந்தமாகவும் திண்மக் கழிவகற்றலுக்கான மண்வெட்டி இதர பொருட்கள் கொள்வனவு சம்மந்தமாகவும் உதவித்தவிசாளர் வை.எல் சுலைமாலெப்பை மற்றும் உறுப்பினர்களான ஏ.அஸ்பர் ,கே.எம்.ஜெஸீமா ,எஸ்.எம் ஆதம்பாவா, ஏ.அப்துல் வாகிது ,ஆகியோர் முன்மொழிவுகளை முன்வைத்து உரையாற்றிய பின்னர் சபைக்கு வந்திருந்த கடிதங்கள் ஆராயப்பட்ட பின்னர் சபை நடவடிக்கைகள் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.