யாழ்.மாவட்டத்திற்குள் நுழையும் சகலருக்கும் அன்டிஜன் பரிசோதனை..! பருத்துறையை முடக்குவதா? இல்லையா? சுகாதார பிரிவின் அறிக்கையின் பின் தீர்மானம். மாவட்ட செயலர்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்திற்குள் நுழையும் சகல பாதைகளிலும் துரித அன்டிஜன் பரிசோதனை நடவடிக்கையை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறியிருக்கும் யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன், அதற்கான ஆய்வுகளை சுகாதார அமைச்சு தற்போது மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார். 

இதன்படி ஆனையிறவு மற்றும் கேரதீவு பகுதிகளில் அன்டிஜன் பரிசோதனைகள் மாவட்டத்திற்குள் நுழையும் சகலருக்கும் நடத்தப்படும். அதற்கான உத்தியோகபூர்வமான அறிவிப்பு மிக மிக துரிதமாக அறிவிக்கப்படும். எனவும் மாவட்ட செயலர் தொிவித்திருக்கின்றார். 

இதேவேளை யாழ்.பருத்துறை - புலோலி பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தொற்று வழியை கண்டறிவதற்கான துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சுகாதார பிரிவினர் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. எனவே தொற்றுக்குள்ளான நபரின் பின்னணி, 

தாக்கத்தின் நிலமை தொடர்பாக சுகாதார பிரிவின் அறிக்கை கிடைத்ததன் பின்னரே பிரதேசத்தை முடக்குவதா? இல்லையா? என்ற தீர்மானத்தினை எம்மால் எடுக்க முடியும் எனவும் மாவட்ட செயலர் மேலும் கூறியிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு