SuperTopAds

பாதுகாப்பு படையினர், சுகாதார பிரிவினரின் நேரடி கண்காணிப்பில் யாழ்.வலி,மேற்கில் கடைகளை திறக்க அனுமதி..

ஆசிரியர் - Editor I

யாழ்.வலி,மேற்கில் கொரோனா பரவல் அபாயம் காரணமாக மூடப்பட்டிருக்கும் நிலையில் முப்படையினர் மற்றும் சுகாதார பிரிவினரின் தீவிர கண்காணிப்புடன் சுகாதார நடைமுறைகளை மிக இறுக்கமாக கடைப்பிடித்து கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 

வலி,மேற்கு பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. இதப்படி நாளை வழமைபோல் வர்த்தக நிலையங்கள் திறக்கப்படவிருக்கின்றது. 

மிக முக்கியமாக வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் மூக்கு மற்றும் வாய் மூடிய நிலையிலான முக கவசம் அணிதல் வேண்டும். ஆக குறைந்தது 30 நிமிடங்களுக்கு ஒருமுறையேனும் கைகளை சவர்க்காரம் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். 

கைகழுவுவதற்கு ஏற்ற ஒழுங்குகளை வர்த்தகர்கள் மேற்கொள்ள வேண்டுமெனவும் கடைகளுக்குள் பொது மக்கள் சமூக இடைவெளி பேணாது நிற்குமிடத்து அதற்குரிய பொறுப்பினை கடை உரிமையாளரே ஏற்க வேண்டும்.

நாளை சங்கானை மரக்கறி சந்தையுடன் நெருக்கமான தொடர்பினைக் கொண்ட 100 பேருக்கான PCR பரிசோதனை சங்கானை மீன் சந்தையில் காலை 9.00 மணிக்கு நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டது.