2வது தடவையாகவும் படுதோல்வியடைந்த யாழ்.மாநகரசபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீடு..!

ஆசிரியர் - Editor I

யாழ்.மாநகரசபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீடு 2வது தடவையாகவும் 24 எதிரான வாக்குகளால் படுதோல்வியடைந்திருக்கின்றது.

பாதீட்டுக்கு ஆதரவாக 21 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டிக்கான

பாதீடு மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனோல்டினால் கடந்த 2 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அந்தச் சமர்ப்பணத்தின் போது, 

அதற்கு ஆதரவாக 19 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டு முதலாவது வாசிப்பு தோற்கடிக்கப்பட்டிருந்தது. 

மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் தலைமையில் இன்று காலை இடம்பெற்ற விசேட பொதுக் கூட்டத்தில் பாதீட்டின் இரண்டாவது வாசிப்பு இடம்பெற்றது. 

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 03 உறுப்பினர்களும், 

தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் ஒருவரும், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 13  உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சியின் 10 உறுப்பினர்களும், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு