கசிப்பு வியாபாரிகளையும், உற்பத்தியாளர்களையும் கட்டுப்படுத்த முயன்ற இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு..!
கசிப்பு வியாபாரிகள் மற்றும் கசிப்பு உற்பத்தியாளர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் செயற்பட்டுவந்த இளைஞன் மீது கசிப்பு வியாபாரிகள் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை ஒன்பது மணியளவில் கட்சன் வீதியில் வைத்து குறித்த இளைஞன் மீது வாள் வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தங்களது கிராமத்தில் இடம்பெற்று வந்து கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த கிராம இளைஞர்கள் ஒன்று சேர்ந்து
பொலிஸாரின் உதவியுடன் நடவடிக்கைகளில் இறங்கியிருந்தனர்.இளைஞர்களின் நடவடிக்கை காரணமாக பல கசிப்பு உற்பத்தியாளர்கள்
மற்றும் விற்பனை செய்வோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.அத்தோடு கசிப்பு உற்பத்தி செய்யும் இடங்களும் அடையாளம் காணப்பட்டு அழிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் குறித்த இளைஞர்கள் மீது கோபம் கொண்ட சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுப்படுகின்ற குழுவினர் இந்த இளைஞர்கள் தனித்தனியாக பயணிக்கின்றபோது
அவர்களை இலக்கு வைத்து தாக்குதலை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.அந்த வரிசையில் தான் குறித்த இளைஞன் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
என ஏனைய இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.