தந்தையால் தாக்கப்பட்டு உயிர் விட்ட மகன்..!

ஆசிரியர் - Admin
தந்தையால் தாக்கப்பட்டு உயிர் விட்ட மகன்..!

பொகவந்தலாவ பொகவானை தோட்டப் பகுதியில் கட்டையால் தாக்கப்பட்டு ஸ்ரீ ஒருவர் கொலை செய்யபட்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்றிரவு(08.03.2018) 08 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடும் பொகவந்தலாவ பொலிஸார், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தைக்கும் மகனுக்கும் மதுபோதையில் ஏற்பட்ட வாய்தர்க்கமே மோதலாக மாறி தந்தையும் மருமகனும் இணைந்து தடியால் தாக்கியமை காரணமாக மகன் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

 தந்தை மற்றும் மருமகன் ஆகிய இருவரும் இணைந்து குறித்த நபரை தலைப் பகுதியில் கடுமையாக தாக்கியமையால் அதிகமான இரத்தம் வெளியேறியதன் காரணமாகவே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர்கள் இருவரும் பொகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.