அடிக்க வேண்டும் என்றால், நாமும் அடிப்போம் - கொக்கரிக்கிறான் ஞானசாரா
தமிழரும் தமிழரும் மோதிக்கொண்டு மரணம் ஏற்பட்டால் அது பெரிதாகாது. சிங்களவரும் சிங்களவரும் மோதிக்கொண்டு மரணம் ஏற்பட்டால் அதுவும் பெரிதாகாது.
ஆனால் ஒரு சிங்களவரும் தமிழரும் மோதிக்கொண்டு, அதனால் ஒரு மரணம் ஏற்பட்டால் அதை ஏன் இனவாதமாக்கி, இனக்கலவரத்தை ஏற்படுத்துகின்றீர்கள் என பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் இன்று -08- இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஒருவர் செய்யும் தவறுகளால் அனைத்து சமூகத்தினரும் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
புத்தளத்தில் 8 வயது சிறுவன் கொலை, சிறுமி சேயா கொலை, மாணவி வித்தியா கொலை செய்யப்பட்டமை மூலம் மனிதர்களின் உள்ளிருக்கும் மிருகத்தனமே தெரிகின்றது.
இனக்கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பிரச்சினைகளையும் ஏற்படுத்துகின்றீர்களா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மைக் காலங்களில் பௌத்தர்கள் மீதும், சிங்களவர்கள் மீதும் முதலில் தாக்குதலை நடத்தியது முஸ்லிம் மக்களே. இதற்கு பல உதாரணங்களையும் ஞானசார தேரர் குறிப்பிட்டார்.
போராட்டம் என்று வந்தவுடன் கட்சி பேதம் பாராமல் அனைவரும் ஒன்றுபடுகின்றார்கள். அங்கு பார்க்கப்படுவது அவர்கள் தமிழா? சிங்களமா? முஸ்லிமா? என்றுதான்.
ஆகவே முஸ்லிம்களால் தான் சிங்களவர்களுக்கு முதலில் பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
இவ்வாறான சம்பவங்கள் மூலம் முஸ்லிம் மக்கள் மீது சிங்கள மக்களுக்கு கோபம், சந்தேகம், வெறுப்பு ஏற்பட்டுள்ளது.
நான் ஒன்றை கூறுகின்றேன். எவ்வளவு முடியுமோ அவ்வளவு பொறுமையாக இருக்கின்றோம். அடிக்க வேண்டும் என்றால் நாமும் அடிப்போம்.
இந்த தாக்குதலில் எந்த இடத்திலும் பொதுபல சேனா தொடர்புபடவில்லை். அவ்வாறு எமது சக்தி வேண்டுமானால் தாராளமாக தரலாம்.
எமது சக்தி இவ்வாறு இருக்காது, நீங்கள் முழுமையாக விழும் அளவுக்கு எங்கள் அடி இருக்கும். ஆகவே எம்மை கோபப்படுத்த வேண்டாம்.
இந்த பொறுமை பயத்தால் வந்தது இல்லை. இது தேவை இல்லை என்று நாம் நினைக்கின்றோம். அதனால்தான் ஒதுங்கி இருக்கின்றோம் எனவும் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டார்.