SuperTopAds

3 மருத்துவர்கள், 2 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களுக்கு தொற்று..! கொழும்பின் சில முக்கிய பகுதிகளுக்கு ஊரடங்கு, அச்சுறுத்தும் கொரோனா..

ஆசிரியர் - Editor I

கேகாலை மாவட்டத்தில் 23 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் குறித்த 23 பேருக்குள் 3 வைத்தியர்களும் உள்ளடக்கப்படுவதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் குமார விக்கிரமசிங்க கூறியுள்ளார். 

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,´கேகாலை வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் மூன்று வைத்தியர்களுக்கு கடந்த தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 

அதில் ஒரு வைத்தியரின் கணவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அவரின் மகனுக்கும் தொற்று ஏற்பட்டிருந்தது. குறித்த வைத்தியரின் மகளுக்கு மற்றும் பணிப்பெண்ணுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

தற்போதைய நிலையில் அவர்கள் அனைவரும் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது. என கூறியுள்ளார். 

இதேவேளை பேலியாககொட மீன் சந்தைக்கு வருகை தந்த நான்கு பொலிஸ் அதிகாரிகளை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் மேல் மாகாண சிறப்பு புலனாய்வு பிரிவில் இணைக்கப்பட்ட இரண்டு அதிகாரிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.