21 மாவட்டங்களில் பாதிப்பு, சமூக மட்டத்தில் கொரோனா பரவல் ஆரம்பம்..! அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை..

இலங்கையில் மினுவாங்கொட கொரோனா கொத்தணி மட்டுமல்ல பல சிறிய கொத்தணிகள் உருவாகியிருக்கின்றது.
21 மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் சமூக மட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட தொடங்கியிருக்கின்றது.
மேற்கண்டவாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இணை செயலாளரான மருத்துவத் ஹரித்த அலுத்கே இதனைத் தெரிவித்தார்.
21 மாவட்டங்களில் தற்சமயம் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், இதுதவிர தனித்தனி சிறிய கொத்தனி கொரோனா பரவலும் தொடங்கியிருப்பதாகவும் கூறினார்.
மினுவங்கொடையில் தொடங்கிய கொரோனா பரவலின் மூலாதாரம் இதுவரை கண்டுபிடிக்கப்படாதமை பாரிய பிரச்சினை என்றும்,
தற்சமயம் சமூகத்தில் பரவத்தொடங்கியிருப்பது நாட்டிற்கு மிகப்பெரிய பாதிப்பாகும் என்றும் அவர் எச்சரித்தார்.
நாட்டில் கொரோனா தொற்று நிலமைகள் குறித்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.