தனிமைப்படுத்தப்பட்டிருந்த முதியவர் மரணம்..! கொரோனா தொற்றாக இருக்கலாம் என சந்தேகம்..
குருநாகல் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவருடைய திருமத்திற்கு சென்று திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் இன்று மரணமடைந்துள்ளார்.
குளியாப்பிட்டிய - கய்யால என்கிற பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக குளியாப்பிட்டிய சுகாதார சேவைப் பணியகம் தெரிவிக்கின்றது.
குறித்த நபர் அண்மையில் திருமண வீடொன்றுக்கு சென்றதுடன், மணமகனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவரும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்ததை அடுத்து சடலத்திலிருந்து சில விடயங்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே உடல் அடக்கம் செய்யப்படும் என்றும் தெரியவருகின்றது.