பேருந்தில் பயணித்த கடற்படை கப்பல்துறை ஊழியரால் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது..!

ஆசிரியர் - Editor

கொழும்பு  கடற்படை கப்பல்துறையில் பணியாற்றும் 5 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

கொழும்பு - மத்துகம பேருந்தில் பயணித்த கொழும்பு கடற்படை கப்பல் துறை ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியமை கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் ஏனைய கப்பல் துறை ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மேலும் 4 ஊழியர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக 

சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். குறித்த பேருந்தில் பயணித்த கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணிப்புரியும் தாதி ஒருவர், 

பேருந்து ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Radio