SuperTopAds

வன்முறைகளை அடுத்து அவசரகாலச்சட்டம் பிரகடனம்!

ஆசிரியர் - Admin
வன்முறைகளை அடுத்து அவசரகாலச்சட்டம் பிரகடனம்!

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் அசாதாரண நிலைமைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னதாக, நாட்டில் எதிர்வரும் 10 நாட்களுக்கு அவசர கால நிலைமையை பிரகடணப்படுத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சர் எஸ்.பீ. திசாநாயக்க தெரிவித்திருந்தார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் இன்று நடைபெற்ற விசேட சந்திப்பின் பின்னரே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

10 நாட்களுக்கு அவசரகால நிலைமையை பிரகடனம் செய்வதற்கான உத்தரவை பிறப்பிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும் அதனை நீடிக்க வேண்டுமாயின் மாத்திரம் பாராளுமன்றத்தில் அதற்கான அனுமதியை பெற வேண்டும் எனவும் அமைச்சர் எஸ்.பீ. திசாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பிலான வர்த்தமானி வௌியிடப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.