உணவு பொதி விற்பனை செய்துவந்த நபருக்கு கொரோனா தொற்று..! உணவு வாங்கியவர்களுக்கு சுகாதார பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு..
கொழும்பு - வத்தளை ஹெந்தலை பகுதியில் உணவு பொதி விற்பனை செய்யும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
குறித்த நபர் கடந்த 03 ஆம் திகதி வரையில் ஹெந்தலை சந்தியில் உணவுப் பொதிகளை விற்பனை செய்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த காலப்பகுதியில் குறித்த நபரிடம் உணவுப் பொதிகளை விலைக்கு பெற்றவர்கள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள பொது சுகாதார பரிசோதகருக்கு
அல்லது பிரதேச சுகாதார அதிகாரிக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.இதேவேளை அவரின் மனைவி பிரன்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் பணி புரிந்துவரும் நிலையில்
அவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது