மக்களே அவதானம் சுகாதார நடைமுறைகளை மீறுவோர் மீது சட்டநடவடிக்கை..! விசேட வர்த்தமானியில் கையொப்பமிட்டார் சுகாதார அமைச்சர்..
முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை பேணாமைக்காக சட்ட நடவடிக்கை மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கை எடுக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலில் சுகாதார அமைச்சர் கையொப்பமிட்டுள்ளார்.
இதனடிப்படையில் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகள் மிகவும் இறுக்கமாக பின்பற்றப்படும். இந் நடைமுறைகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை அல்லது தனிமைப்படுத்தல் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் முடிந்தளவு சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுவது சிறந்தது.