SuperTopAds

கொரோனாவுக்கு சிகிச்சையளிப்பதற்கான 12 வைத்தியசாலைகளில் 168 படுக்கைகள் மட்டுமே மிச்சம்..!

ஆசிரியர் - Editor I

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோருக்கு சிகிச்சையளிக்க நாடு பூராகவும் உள்ள 12 வைத்தியசாலைகளில் 168 படுக்கைகள் மட்டுமே உள்ளதாக கொரோனா தடுப்பு செயற்பாட்டு மையத்தின் இன்று அதிகாலை 5 மணி தரவுகள் கூறுகின்றன.

மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவலின் விளைவாக வைத்தியசாலைகளில் இவ்வாறு படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் திறனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.