போக்குவரத்து கட்டுப்பாடுகளையாவது விதியுங்கள்..! நிலமை மோசமாகலாம், அரசுக்கு மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை..
ஹம்பகா - மினுவாங்கொட கொரோனா கொத்தணி போன்று பாரியளவில் கொரோனா கொத்தணிகள் உருவானால் அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாது. என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசை எச்சரித்திருக்கின்றது.
வைரஸ் பரவக் கூடி அபாயமுள்ள பிரதேசங்களை இனங்கண்டு அவற்றுக்கிடையிலான போக்குவரத்தை மட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஷெனால் பெர்னாண்டோ தெரிவித்தார்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்க அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.