அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கான இறக்குமதி வரி நீக்கம்..! ரின் மீன் 200 ரூபாய், சீனி 85 ரூபாய் விலைகளையும் அறிவித்தது ஜனாதிபதி செயலகம்..
நாட்டில் தற்போது நிலவும் கொரோனா நிலமை மற்றும் மக்களின் வாழ்க்கை செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பருப்பு, பொிய ரின் மீன், பொிய வெங்காயம், சீனி ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளது.
இதன்படி பொிய ரின் மீன் 200 ரூபாய்க்கும், பொிய வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கும், சீனி ஒரு கிலோ 85 ரூபாய்க்கும் மக்கள் கொள்வனவு செய்ய முடியும் எனவும் குறித்த அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கலாக 500 ரூபாய்க்கு மேற்பட்ட தொகையில் பொருட்கள் வாங்கும்போது
1 கிலோ பருப்பு 150 ரூபாய்க்கும் வாங்க ஒழுங்குகள் செய்யப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.