SuperTopAds

ஓய்வூதியர்களின் கவனத்திற்கு..! ஓய்வூதிய திணைக்களத்தின் சகல செயற்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தம்..

ஆசிரியர் - Editor I

ஓய்வூதிய திணைக்களத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள திணைக்களம், தற்போது நாட்டில் நிலவும் கொரோனா பரவல் அபாயம் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக திணைக்களம் தொிவித்துள்ளது. 

மீள் அறிவிப்பு வரும் வரை ஓய்வூதியத் திணைக்கள வளாகத்திற்கு வருவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.1970 என்ற விசேட தொலைப்பேசி இலக்கத்துடன் ஓய்வூதிய திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு 

மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என ஓய்வூதிய திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.