SuperTopAds

பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் என கூறி வர்த்தகர்களிடம் பணம் பறிக்கும் கும்பல்..! எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல்..

ஆசிரியர் - Editor I

தங்களை பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் என அடையாளப்படுத்தி வர்த்தகர்களிடம் பணம் மோசடி செய்யும் கும்பல் தொடர்பாக தகவல்கள் கிடைக்கப்பெற்றிருக்கும் நிலையில் வர்த்தகர்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸ் தலமையகம் தொிவித்துள்ளது. 

இலகுவழி பணப் பரிமாற்றல் ஈஸி கேஷ் ஊடாக இந்த மோசடிகள் இடம்பெறுகின்றது.குறிப்பாக வீரக்கெட்டிய, ஹோமாகம மற்றும் மொரகஹஹேன ஆகிய பகுதிகளில் இவ்வாறு பண மோசடிகள் அண்மை தினமாக பதிவாகியுள்ளதுடன், பணம் அனுப்பாட்ட தொலைப்பேசி இலக்கங்கள் ஊடாக 

விசாரணைகளை பொலிசார் ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு இலகுவழி பணப் பரிமாற்றல் ஈஸி கேஷ் சேவைகள் ஊடாக பண மோசடிகளில் ஈடுபடுபவர்கள் குறித்து எச்சரிக்கையுடன் செயற்படுமாறு மக்களிடம் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.