SuperTopAds

நாட்டில் தற்போது பரவும் கொரோனா அதிக வீரியத்துடன் ஒருவரில் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது..! வைரஸ் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தினர்..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் தற்போது பரவிவரும் கொரோனா தொற்று ஒருவரிலிருந்து மற்றவருக்கு மிக வேகமாக பரவுவதுடன், மிக வீரியத்துடன் இருப்பதாக வைரஸ் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும் நிபுணர்களால் கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 

இது குறித்து அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஜெயருவன் பண்டார இன்று மாலை ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கையில் குறிப்பிட்டதாவது, வைரஸ் பரவாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

என்றும் சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார். ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய சுகாதார அமைச்சின் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவின் பணிப்பாளர் மருத்துவர், பாலிதா கருணபிரேம, 

நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை வழங்கும் திறனில் 70 சதவீதம் இப்போது நோயாளிகள் நிறைந்ததாக உள்ளது என்று குறிப்பிட்டார். இதேவேளை, கோவிட் 19 வைரஸை உலகில் இருந்து ஒழிக்கும் வரை அதனுடன் மக்கள் வாழப் பழகவேண்டும் என்று 

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர், மருத்துவ வல்லுநர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கோரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முன்னர் ஊரடங்கு உத்தரவை நீக்க முடியாது என்றும் நாட்டை சமாளிக்க முடியாது. 

என்றும் அவர் குறிப்பிட்டார். இன்று ஆரம்பமாகிய க.பொ.த. உயர்தரப் பரீட்சையை கோரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடத்த முடியும் என்று தான் நம்புவதாகவும் தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர், மருத்துவ வல்லுநர் சுதத் சமரவீர கூறினார்.