SuperTopAds

1வது பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பாடசாலை மாணவனுக்கு 2வது பரிசோதனையில் தொற்றில்லை என உறுதி..!

ஆசிரியர் - Editor I

சிலாபம் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்கும் மாணவன் ஒருவனுக்கு 2வது பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்றில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக முதலாவது பிசிஆர் பரிசோதனையில் இனங்காணப்பட்ட போதிலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிசிஆர் பரிசோதனைகளின் ஊடாக 

அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.குறித்த மாணவனுக்கு சிகிச்சையளித்த் சிலாபம், பங்கதெனிய வைத்தியருக்கும் கொரோன தொற்று இல்லை. 

என உறுதி செய்யப்பட்டுள்ளது. 17 மானவர்களுடன் கம்பஹா பகுதியில் இடம்பெற்ற வகுப்பிற்கு வேன் ஒன்றின் மூலம் வருகை தந்த 17 வயதுடைய மாணவன் ஒருவன் கடந்த 6 ஆம் திகதி 

சுகவீனமுற்ற நிலையில் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.