கட்டுநாயக்க ஆடை தொழிற்சாலையில் மேலும் 11 ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது..!
கொழும்பு - கட்டுநாயக்க பகுதியில் உள்ள NEXT என்ற ஆடை தொழிற்சாலையில் பணியாற்றும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்பட்டுள்ளது.
குறித்த ஆடை தொழிற்சாலையில் பணியாற்றும் 38 வயதான பெண்ணுக்கு கொரோனா தொற்றுள்ளமை நேற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில்,
அவருடன் பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே 11 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.