கட்டுநாயக்கவில் உள்ள ஆடை தொழிற்சாலை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி..! ஏற்றுமதி வலயத்திலுள்ள 3 தொழிற்சாலைகள் மூடப்பட்டன..
கொழும்பு - கட்டுநாயக்க ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயத்தில் உள்ள NEXT என்ற ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 38 வயதான பெண்ணிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்படுள்ளதாக அப்பகுதியின் பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
நோயாளியுடன் நெருங்கிய பழகிய தொழிற்சாலையில் உள்ள மற்ற ஊழியர்கள் மீது பி.சி.ஆர் சோதனைகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனதொற்று இனங்காணப்பட்டதையடுத்து ஏற்றுமதி ஊக்கு வலயத்தில் உள்ள 3 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.