SuperTopAds

64 வயதான பெண் உயிரிழப்பு..! கொரோனா தொற்றிருக்கலாம் என சந்தேகம், பீ.சி.ஆர் பரிசோதனை நடத்த தீர்மானம்..

ஆசிரியர் - Editor I

கலகந்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 64 வயதான யக்கல பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவருடைய மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பட்டுள்ளது. 

உயிரிழந்தவரின் மகளுக்கு கொரோனா தொற்று இருந்ததால் அவருக்கும் கோவிட் -19 நோய்த் தொற்று இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிப்பதாக, 

கோவிட் 19 நோய்த் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் பேச்சாளர் கேணல் விஜித ஹெட்டியராச்சி கூறினார். அதனால் உயிரிழந்தவரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளது.