தனிமைப்படுத்தலிருந்து தப்பிக்க ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் சிலர் தலைமறைவு..! கொரோனா நோயாளி தப்பி ஓட்டம். களமிறக்கப்பட்டது இராணுவம்..
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் கொழும்பு ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடியுள்ளார்.
கொழும்பு பேலியகொட பகுதியை சேர்ந்த குறித்தநபர் தப்பி ஓடும்போது பொது போக்குரத்தை பயன்படுத்தி தப்பித்திருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் தொடர்பான தீவிர விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதேவேளை தனிமைப்படுத்தலைத் தவிர்ப்பதற்காக ஆடைதொழிற் சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் தலைமறை வாகி விட்டதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா கொத்து அடையாளம் காணப்பட்ட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த அனைவரும் தற்போது, வீடுகளில் தங்கி இருக்கக்கூடாது என்றும், தனிமைப்படுத் தல் நிலையங்களில் அல்லது வைத்தியசாலைகளில் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இது ஒரு தேசிய பொறுப்பு என்று பாதுகாப்புப் படையினருக்கு அறிவித்து உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு அனுப்புமாறு கோரியுள்ளார்.
தனிமைப்படுத்தலிலிருந்து தப்பிக்கும் ஊழியர்களைக் கண்டறிய உளவுத்துறை நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.