ஒக்டோபர் 6ம், 7ம் திகதியுடன் சகல தனியார் வகுப்புக்களும், பிரத்தியே வகுப்புக்களும் நிறுத்தப்படவேண்டும்..! கல்வியமைச்சு அறிவிப்பு..

ஆசிரியர் - Editor
ஒக்டோபர் 6ம், 7ம் திகதியுடன் சகல தனியார் வகுப்புக்களும், பிரத்தியே வகுப்புக்களும் நிறுத்தப்படவேண்டும்..! கல்வியமைச்சு அறிவிப்பு..

இம்முறை க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் 5 புலமை பரிசில் பரீட்சை ஆகியவற்றில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தனியார் வகுப்புக்கள், பிரத்தியேக வகுப்புக்கள் கல்வியமைச்சினால் குறிப்பிடப்பட்ட திகதிக்குள் முடிக்கப்படவேண்டும். என அமைச்சு அறிவித்துள்ளது. 

இதன்படி, உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அனைத்து தனியார் கல்வி வகுப்புகளும் ஒக்டோபர் 6ஆம் திகதிக்குள் நிறுத்தப்பட வேண்டும். மேலும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான பிரேத்தியேக வகுப்புகள் 

ஒக்டோபர் 7ஆம் திகதி நள்ளிரவுக்குள் முடிக்கப்பட வேண்டும்.க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 12ஆம் திகதி முதல் நவம்பர் 6ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11 ஆம் திகதி நடைபெறும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Radio