உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதி சாரா புலஸ்த்தினியை இலங்கைக்கு நாடு கடத்துமாறு இந்தியாவிடம் கேளுங்கள்..

ஆசிரியர் - Editor
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதி சாரா புலஸ்த்தினியை இலங்கைக்கு நாடு கடத்துமாறு இந்தியாவிடம் கேளுங்கள்..

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களுடன் தொடர்புடையவர் என கூறுப்படம் சாரா புலஸ்த்தினியை இந்தியாவிலிருந்து நாடு கடத்துவதற்கு தேவையான கோரிக்கையை இந்தியாவுக்கு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் சாராவுக்கு நேரடி தொடர்புகள் உள்ளதால் அவரை நாடு கடத்துவதற்கான வேண்டுகோளை விடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து சாராவை நாடுகடத்தினால் முக்கியமான தகவல்களை பெறமுடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் நான் உதவ தயார் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஆணைக்குழுவின் முன்னிலையில் நான் இதனை தெரிவித்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Radio