தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேறியவருக்கு மீண்டும் கொரோனா..! சமூக மட்டத்தில் பரவலா..?

ஆசிரியர் - Editor
தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேறியவருக்கு மீண்டும் கொரோனா..! சமூக மட்டத்தில் பரவலா..?

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்திருந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு வெளியேறிய நபருக்கு மீண்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 16ம் திகதி டுபாயில் இருந்து நாடு திரும்பிய  23 வயது இளைஞன் ஆனமடுவ பிரதேசத்தை சேர்ந்தவர். இரணவில கொரோனா தனிமைப்படுத்தும் முகாமில் தங்கவைக்கப்பட்டு 

பூரண குணம் பெற்று வீடு திரும்பியிருந்தார்.இந்நிலையில் அவர் சுகயீனம் காரணமாக சிலாபம் வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் காரணமாக குறித்த நபர் பயணித்த மற்றும் இருந்த 

பகுதியில் தொற்று பரவியிருக்குமா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.சுகம்பெற்ற நபருக்கு மீண்டும் கொரோனா சமூகத்தில் பரவியதா?

Radio