SuperTopAds

யாழ்.மாவட்டத்தின் பனைசார் உற்பத்திகளை விற்பனை செய்ய கனடாவில் இரு விற்பனை நிலையங்கள்..! இதர நாடுகளிலும் திறக்க நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தின் பனைசார் உற்பத்திகளை விற்பனை செய்ய கனடாவில் இரு விற்பனை நிலையங்கள்..! இதர நாடுகளிலும் திறக்க நடவடிக்கை..

பனைசார் உற்பத்தி பொருட்களுக்கான சந்தை வாய்ப்பு உள்ளூரில் கணிசமான அளவில் இல்லாத நிலையில் வெளிநாடுகளில் பனை அபிவிருத்தி சபை ஊடாக பனைசார் உற்பத்தி பொருட்கள் விற்பனை நிலையத்தை திறக்கவுள்ளதாக கூறியிருக்கும் சபையின் தலைவர் கிருஷாந்தி பத்திராஜா, 

முதற்கட்டமாக கனடா நாட்டில் இரு விற்பனை நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக கூறியுள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு க் குழத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கயன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்ற 

பனை உற்பத்தியாளர்கள் கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த மாதம் 5000 கிலோ பனம் கட்டி வெளிநாட்டுகளுக்கு அனுப்பத் தேவைப்பட்டது. எனினும் 2000கிலோ பனம் கட்டியே எமக்குக் கிடைத்தது. யாழ்ப்பாண பனை உற்பத்திப் பொருட்களுக்கு தெற்கில் மட்டுமல்லாது 

சர்வதேச ரீதியிலும் சிறந்த கேள்வி நிலவுகின்ற நிலையில் குறித்த துறையை முன்னோக்கி நகர்த்திச் செல்வதற்கு அனைவரும் தமது சொந்தத் துறையாக பனைக் கூட்டுறவைக் கருதி முன்னேற்ற வேண்டும். பனை உற்பத்தியாளர்களை ஊக்கிவிக்கும் பொருட்டு அரசாங்கம் சிறந்த சந்தை வாய்ப்பினை பெற்று தரும் நோக்கில் 

பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் நீர்கொழும்பில் புதிய கற்பகதருக் கடைத் தொகுதி திறக்கப்பட உள்ளது எனத் தெரிவித்தார். அங்கு கருத்துத் தெரிவித்த பனம் உற்பத்தியாளர்கள் அரசாங்கம் கித்துள் உற்பத்திக்கு மானியம் வழங்குகிறது பனம் உற்பத்திக்களுக்கு மானியம் வழங்குவதில்லை.

இதனால் பனை உற்பத்தியாளர்கள் தொழில் நீதியான நெருக்கடிகளுக்கும் வாழ்வாதார நீதியான நெருக்கடிகளுக்கும் உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது கித்துள் உற்பத்திகளுக்கு வரிவிலக்கை அரசாங்கம் வழங்கியுள்ளதுடன் பனை உற்பத்திப் பொருட்களுக்கும் தொழில் நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம் வரி அறவிடுகின்றது. 

இலங்கை மது வரி சட்டத்தில் கித்துள் பாணி உள்ளடங்காத போதிலும் பதநீர் மதுச் சட்டத்தில் உள்ள ஏற்கப்பட்டுள்ளது. பனையில் இருந்து எடுக்கப்பட்ட பதநீரானது 11மணித்தியாலத்திற்கு பின்னரே மதுவாக மாறுகின்ற நிலையில் மருத்துவ குணங்கள் உடைய இயற்கை பானமாக பலரும் இதை அருந்துகிறார்கள்.

ஆகவே அரசாங்கம் பனை உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு சலுகைகளை வழங்கும் பட்சத்தில் குறித்த உற்பத்தி துறையை வீழ்ச்சி அடையாமல் முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.