போலி ஆவணங்களை பயன்படுத்தி கனடாவுக்கு செல்ல முயற்சித்த 13 பேர் இன்று அதிகாலை கைது..!

ஆசிரியர் - Editor
போலி ஆவணங்களை பயன்படுத்தி கனடாவுக்கு செல்ல முயற்சித்த 13 பேர் இன்று அதிகாலை கைது..!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக போலி ஆவணங்களை பயன்படுத்தி கனடாவுக்கு செல்ல முயற்சித்த 13 பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

நெருக்கடியான நேரத்தில் விமான நிலையத்தில் கண்காணிப்புக்கள் தீவிரமாக இருக்காது என்ற கணிப்புடன் போலி ஆவணங்களை பயன்டுத்தி டோஹா, கட்டார் போன்ற நாடுகளில் எதாவது ஒன்றுக்குள் நுழைந்து

பின்னர் அங்கிருந்து கனடாவுக்குள் நுழைவது இவர்களது திட்டமாக இருந்தமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தொியவந்திருக்கின்றது. 

எனினும் விமான நிலையத்தில் முன்னரை விடவும் கண்காணிப்பு தீவிரமாக உள்ள நிலையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிரக்கின்றனர். 

Radio