இலங்கையில் இறைச்சிக்காக மாடுகளை வெட்ட தடை..! ஆழுங்கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் நிறைவேறியது தீர்மானம்..
இலங்கையில் இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதற்கு தடைவிதிக்கும் தீர்மானம் ஆழுங்கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் எதிர்ப்பில்லாமல் நிறைவேறியிருக்கின்றது.
இன்று நடைபெற்ற ஆழுங்கட்சி நாடாளுமன்ற குழு அமர்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் குறித்த விடயம் தொடர்பான பிரேரணை சமர்பிக்கப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி உள்ளூர் கால்நடைகளை அறுக்காமல், தேவைப்பட்டால் மாட்டிறைச்சியை இறக்குமதி செய்ய ஒரு திட்டத்தை கொண்டுவருவதற்கு தயாராக உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.