வாடகை வீட்டில் இருக்கும் தமிழர்கள் உரிமையாளருடன் குழப்பம் செய்ய கூடாது!
இலங்கையில் தமிழ் மக்களுக்கு வாழும் உரிமை இருக்கின்றது. வாடகை வீட்டில் இருக்கும் போது வீட்டு உரிமையாளருக்குக் குழப்பம் விளைவிக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளார் கிழக்கு மாகாண தொல்லியல் செயலணியின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எல்லாவல மேதானந்த தேரர்.
இதனை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்து செயற்பட வேண்டும். பெரும்பான்மையின மக்களுக்கு அவர்கள் குழப்பம் ஏற்படுத்தக் கூடாது.
இலங்கையின் முதல் சுதேசிகளின் மொழி தமிழ் என்றும், வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் எனவும் விக்னேஸ்வரன் சொல்லியிருப்பது அப்பட்டமான பொய். அதற்கான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை.
இதனால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் இல்லை. மாறாகப் பிரச்சினைகள் தான் உருவாகும். வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் எனவும், பூர்வீகம் எனவும் நிரூபிப்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.