பாடசாலை சேவைக்கு தனித்துவமான பேருந்துகள் மஞ்சள் நிறத்தில்..! யாழ்.மாவட்டத்தில் 3 பேருந்துகள் தயார்ப்படுத்தப்படுகிறது..
பாடசாலை சேவையில் ஈடுபடும் பேருந்துகளை தனித்துவமான நிறத்துடன், தனித்துவமான பேருந்துகளாக மாற்றும் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கமைய நாடு முழுவதும் 10 இ.போ.ச பேருந்துகளுக்கு மஞ்சள் நிறம் பூசி தனித்துவமான பேருந்துகளாக மாற்றும் நடவடிக்கை முற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை இ.போ.ச தலைவர் கிங்ஸ்லி ரணவங்க கூறியுள்ளார். ஜனாதிபதியின் ஆலோசணைக்கு அமைவாக பாடசாலை மாணவர்களுக்கு பிரத்தியேக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.இந்த நிலையில் மாணவர்களின் போக்குவரத்திற்காக மட்டும் பயன்படுத்தவே
இவ்வாறு பேருந்துகளுக்கு நிறப்பூச்சு பூசும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி யாழ்.மாவட்டத்தில் 3 பேருந்துகளுக்கு மஞ்சள் நிறம் பூசப்படும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.