இலங்கையை அச்சுறுத்தும் 25 ஆபத்தான வன்முறை கும்பல்கள் அடையாளப்படுத்தப்பட்டது..! 20 குழுக்கள் மோசமான குற்றங்களுடன் தொடர்பு, அழிப்பு நடவடிக்கை தீவிரம்..
சுமார் 400 உறுப்பினர்களுடன் ஆக குறைந்தது 25 வன்முறை கும்பல்கள் மேல் மாகாணத்தில் மட்டும் இயங்கிக் கொண்டிருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டிருப்பதுடன்,
25 கும்பல்களில் 20 கும்பல்கள் அதிகளவான குற்றச் செயல்களுடன் சம்மந்தப்படுவதும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கூறியுள்ளார்.
மேல் மாகாணத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட அனைத்து குற்றங்களையும், கட்டுப்படுத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து கொழும்பில் நடைபெற்ற செயலமர்வில் அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், நாங்கள் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய சவால், அவர்கள் இன்னமும் தங்கள் போதைப்பொருள் வியபாரம் அல்லது பாதாள உலக நடவடிக்கைகளை நடத்துவதே ஆகும்.
388 பேரில் 346 நபர்கள் இன்னும் செயலில் உள்ளனர். அந்த கும்பல்களில் 123 பேர் பிணையில் வெளியில் உள்ளனர். பிணையில் உள்ளவர்கள் பணம் பறித்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இதனிடையே, குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள 16 நபர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை, 25 பேர் வெளிநாட்டில் உள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.