வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில்..! அடித்துக் கொல்லப்பட்ட உணவக உரிமையாளர், இன்று அதிகாலை சம்பவம்..
உணவகத்தில் உருவான வாய்த்தர்க்கம் கோஷ்டி மோதலாக மாறியதில் உணவக உரிமையாளர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்.
குறித்த சம்பவம் கொட்டிகாவத்தை பகுதியில் உள்ள தற்காலிக தெருவோர உணவகத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றிரக்கின்றது.
இன்று அதிகாலை 2 மணியளவில் கொட்டிகாவத்தை சந்தியில் அமைந்துள்ள குறித்த உணவகத்தில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உணவு பெறுவதற்காக வருகைத் தந்த ஒருவருக்கும் உணவகத்தின் உரிமையாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் இறுதியில் மோதலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, உணவக உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் பின்னர் மற்றுமொரு குழுவை அழைத்து வந்து உரிமையாளரை தாக்கியதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் உயிரிழந்த நபர் கொட்டிகாவத்தை பகுதியில் வசித்து வரும் 30 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் எந்தவொரு நபர்களும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிடிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.