இலங்கையில் நில அதிர்வு உணரப்பட்டதா..? ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளதா..? அதிகாரிகள் குழு இன்று நோில் ஆராய்வு..
கண்டி மாவட்டத்தில் சில பகுதிகளில் நேற்று இரவு நில அதிர்வு உணரப்பட்ட நிலையில் அதற்கான காரணம் என்ன? பாதிப்புகள் ஏதேனும் உண்டா? என்பது தொடர்பில் இன்று ஆராயப்படவுள்ளது.
நேற்று இரவு 8.48 மணியளவில் கண்டியின் பல பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டிருந்தது. எனினும் பூமி அதிர்ச்சி அல்ல. அதனால் அனர்த்தங்கள் நிகழப்போவதில்லை என புவிச்சரிதவியல் திணைக்களம் கூறியதுடன்,
மக்கள் இது குறித்து அச்சமடையவேண்டியதில்லை. என அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் புவிச்சரிதவியல் ஆய்வு மையத்தின் அதிகாரிகள் குழு கண்டி - அனுரகம பிரதேசத்தில் ஆய்வுகளை நடத்தவுள்ளனர்.
மேலும் பல்லேகல பகுதியில் ரிக்டர் அளவுகோலில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் உண்மையில் நடந்தது என்ன? ஆபத்துக்கள் உள்ளதா? என்பது தொடர்பில் இந்த குழு ஆராயவுள்ளது.