SuperTopAds

சிங்கராஜ வனத்திற்குள் நுழைந்த ஜனாதிபதி..! பூரணமான அறிக்கை சமர்ப்பிக்கும்படி பணிப்பு..

ஆசிரியர் - Editor I
சிங்கராஜ வனத்திற்குள் நுழைந்த ஜனாதிபதி..! பூரணமான அறிக்கை சமர்ப்பிக்கும்படி பணிப்பு..

சிங்கராஜ வனப்பகுதியின் எல்லையில் இடம்பெறும் நெலுவா லங்காகம சாலையின் புனரமைப்பு பணிகள் பெரும் சர்ச்சைகளை உண்டாக்கியிருக்கும் நிலையில், குறித்த பகுதிக்கு நோில் விஜயம் செய்த ஜனாதிபதி கோட்பாய ராஜபக்ச அங்குள்ள நிலமைகளை ஆராய்ந்துள்ளார். 

சிங்கராஜா வனப்பகுதிக்கு அருகில் குறித்த சாலையை நிர்மாணிப்பது, சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துமென சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையிலேயே இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு, ஜனாதிபதி குறித்த பகுதிக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார். 

ஜனாதிபதியின் குறித்த விஜயத்தின்போது வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்கவும் உடன் சென்றிருந்தார். இதேவேளை குறித்த சாலையை நிர்மாணிப்பது சிங்கராஜா காடுகளுடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா?

என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இதற்கு முன்பு சாலை மேம்பாட்டு ஆணையகம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்திற்கு அறிவுறுத்தியிருந்தார்.குறித்த ஆணையகங்களின் அறிக்கைகள் வரும் வரை சிங்கராஜா காடு வழியாக 

நெலுவா-லங்காகம சாலை அமைப்பதை தற்காலிகமாக நிறுத்துமாறும் ஜனாதிபதி சமீபத்தில் உத்தரவிட்டார்.இதற்கிடையில், புத்தளம்– ஆனைவிழுந்தான் ஈரவலய வனப்பகுதியில் இறால் வளர்ப்புக்காக காணி சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக 

கைது செய்யப்பட்ட வர்த்தகர் ஒருவர் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் காணி சுத்திகரிப்பு பணிக்காக பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இயந்திர வாகனத்துடன் அதன் சாரதி நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனை அடுத்து ஆராச்சிக்கட்டுவ பொலிஸில் குறித்த வர்த்தகர் சரணடைந்ததை அடுத்து இன்று கைது செய்யப்பட்டார். பின்னர், குறித்த இருவரையும் இன்று நீதவான் முன்நிலையில் முற்படுத்தியபோதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.