9வது நாடாளுமன்ற அமர்வில் இன்று நடைபெற்றது என்ன..? மரியாதை வேட்டுக்கள், அணிவகுப்புக்கள் இல்லாமல் மிக சாதாரணமாக வந்த ஜனாதிபதி..
9வது நாடாளுமன்ற அமர்வு இன்று நடைபெற்றது. இதன்போது 223 உறுப்பினர்கள் வருகை தந்தனர். ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அபே ஜனபல கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் இதுவரையில் தெரிவு செய்யப்படவில்லை என்பதனால் அவர்களின் ஆசனங்கள் வெற்றிடமாகவே காணப்பட்டன.
ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் பாராளுமன்ற கன்னி அமர்வில் கலந்து கொள்ளாத முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நீதிமன்றம் அனுமதியுடன் இன்றைய கன்னி அமர்வில் பங்கேற்றிருந்தார்.
எதிர்க் கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்படார்
சபாநாயராக - மஹிந்த யாப்ப அபேவர்த்தன
பிரதி சபாநாயகராக - ரஞ்சித் சியாம்பலபிட்டிய.
குழுக்களின் பிரதி தலைவர் - அங்கஜன் இராமநாதன்.
ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வு அவருடைய அறிவுறுத்தலின் பேரில் மிகவும் சாதாரணமானமுறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கமைய மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்படுதல் மற்றும் வாகன அணிவகுப்பு போன்றவை இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.