4 நாட்களுக்கு தினசரி 1 மணிநேரம் மின்வெட்டு..! நாடு 4 வலயங்களாக பிரிக்கப்பட்டு மின்வெட்டு அமுல், நேர ஒழுங்கும் அறிவிக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I

இன்று தொடக்கம் 4 நாட்களுக்கு தினசரி 1 மணித்தியாலம் நாடளாவியரீதியில் மின்வெட்டு அமுலாகும் என இலங்கை மின்சாரசபையின் பொது முகாமையாளர் கீர்த்தி கருணாரத்ன கூறியுள்ளார். 

முழு நாடும் நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்டு இரண்டு கட்டங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, முதல் இரண்டு வலயங்களிலும் மாலை 6 மணி தொடக்கம் 7 மணி வரை 

மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது. ஏனைய இரண்டு வலயங்களிலும் இரவு 7 மணி தொடக்கம் 8 மணி வரை மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

மின் பிறப்பாக்க கட்டமைப்பில் மின்சார உற்பத்தி வழமைக்கு திரும்பும் வரை நான்கு நாட்களுக்கு மாத்திரம் மின்சார விநியோகத்தைத் துண்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு