சுழற்சி முறையில் மின்வெட்டு அமுலாக்கப்படும் வாய்ப்பு..! நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் கோளாறு..
இலங்கையில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்துவதற்கான சாத்தியங்கள் எழுந்திருக்கின்றது. நேற்றய தினம் மின் விநியோகத்தில் ஏற்பட்டிருந்த கோளாறு காரணமாக
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம் செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சாரசபையின் பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்த்தன கூறியிருக்கின்றார்.
சுழற்சி முறையில் மின்வெட்டு ஆமுலாகும் வாய்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டிருக்கும் செய்தியில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
2500 தொடக்கம் 2600 மெகாவோட் மின்சாரம் தேவையாகவுள்ள நிலையில், நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தினால் 810 மெகாவோட் மின் உற்பத்தி செய்யப்படுகின்றது.
இந்நிலையில் ஒட்டுமொத்தமாக நாட்டின் மின் தேவையை நிவர்த்திப்பதற்காக சுழற்சிமுறையில் மின்வெட்டு அமுலாக்கப்படலாம். என மின்சாரசபையின் பேச்சாளர் கூறியுள்ளதாக ஆங்கில ஊடகம் கூறியுள்ளது.