SuperTopAds

கூட்டமைப்பின் பேச்சாளர் பதவி, தேசிய பட்டியல் ஆசனம் ரெலோவின் புதிய ஆசை..! 20ம் திகதி நிறைவேற்றப்படுமா..?

ஆசிரியர் - Editor I
கூட்டமைப்பின் பேச்சாளர் பதவி, தேசிய பட்டியல் ஆசனம் ரெலோவின் புதிய ஆசை..! 20ம் திகதி நிறைவேற்றப்படுமா..?

தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் பதவி மற்றும் தேசிய பட்டியல் ஆசனத்தின் இறுதி இரண்டரை ஆண்டுகள் தமது கட்சிக்கு வழங்கப்படவேண்டும். என எதிர்வரும் 20ம் திகதி கட்சியின் நாடாளுமன்ற குழுவில் கோருவதற்கு ரெலோ தீர்மானித்துள்ளது. 

ரெலோவின் மத்திய குழுக் கூட்டம் நேற்று முன் தினம் திருகோணமலையில் இடம்பெற்றது. இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட ரெலோ இம்முறை 3 ஆசனங்களை பெற்றுள்ள நிலையில் புளொட் கட்சியும் ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளது. 

அந்த வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் முதல் தடவை எதிர்வரும் 20ம் திகதி கூடும் சமயம் பேச்சாளர் தெரிவும் இடம்பெறுவது வழமையானதாகும். இவற்றின் அடிப்படையில் கூட்டமைப்பு பெற்ற ஆசனத்தில் கணிசமானவை ரெலோ மற்றும் புளெட்டும் பெற்றுள்ளமையினால் பேச்சாளர் பதவி ரெலோவிற்கு வழங்கப்பட வேண்டும். 

அவ்வாறு இல்லையேல் அதனை இம் முறை புளட்டிற்கு வழங்க வேண்டும் என தீர்மானகிக்கப்பட்டது. 2010ல்  ஈ.பி.ஆர்.எல்.எவ் இற்கும் , 2015இல் தமிழ் அரசுக் கட்சி வசமிருந்த பேச்சாளரை தற்போது ரெலோ கோருகின்றது. இவ்வாறு மேற்கொண்ட தீர்மானத்தை எதிர்வரும் 20ஆம் திகதி 

நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் முன் வைத்து வலியுறுத்துவதாகவும் தீர்மானித்துள்ளனர். மேலும் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனம் கலையரசனுக்கு வழங்கப்பட்டிருக்கும் நிலையில் அதில் இரண்டரை ஆண்டு காலத்தை தமக்கு வழங்கவேண்டும் எனவும் ரெலோ கேட்பற்கு தீர்மானித்துள்ளது.