யாழ்.போதனா வைத்தியசாலையில் பீ.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட 100 போில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor
யாழ்.போதனா வைத்தியசாலையில் பீ.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட 100 போில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி..!

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று பீ.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட 100 போில் ஒருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியிருக்கின்றார். 

யாழ்.விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கே கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் பணிப்பாளர் கூறியுள்ளார். இதன்படி இன்று பரிசோதனைக்குட்படுத்தப்பட்டவர்களின் விபரம், 

* போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 2 பேர்

* தனிமைப்படுத்தல் மையம் விடத்தல்பளை -9 பேர் (ஒருவருக்கு பேருக்கு தொற்று உறுதி )

*பொது வைத்தியசாலை மன்னார் - 4 பேர்

* நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - 30 பேர்

* ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை - 5பேர்

* பிரதேச வைத்தியசாலை கோப்பாய்-5 பேர்

* பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - 20பேர்

* யாழ் மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு -24 பேர்

* பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு -ஒருவர்

Radio