ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் பதவியை துறந்தார் ரணில் விக்கிரமசிங்க..!
ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க பதவி விலகியுள்ளார். எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறும்
கட்சியின் செயற்குழு கூட்டத்திற்குப் பின்னர் புதிய தலைவர் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அகிலவிராஜ் கரியவாசம் தெரிவித்துள்ளார்.
எனவே கட்சியின் தலைமை பதவிக்காக ரவி கருணநாயக்க, தயா கமகே, அகில விராஜ் காரியவசம், வஜிர அபேவர்தன ஆகியோர்
கட்சியின் உறுப்பினர்களினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.