SuperTopAds

வாக்களிப்பு நிலையங்கள் ஊடாக கொரோனா பரவாது..! நான் 100 வீத உத்தரவாதம் தருகிறேன்..

ஆசிரியர் - Editor I
வாக்களிப்பு நிலையங்கள் ஊடாக கொரோனா பரவாது..! நான் 100 வீத உத்தரவாதம் தருகிறேன்..

வாக்களிப்பு நிலையங்களில் கொரோனா தொற்று ஏற்படாது. அதற்கு தேவையான அதியுச்ச பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருகிறது. எனவே வாக்களிக்க மக்கள் அச்சப்படவேண்டாம். அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன். 

மேற்கண்டவாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அணில் ஜயசிங்க கூறியிருக்கின்றார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது மேலம் அவர் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உரிய காலத்தில் நடைப்பெறவிருந்த பொதுத்தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த 6 மாத காலமாக முன்னெடுத்த கடினமான செயற்பாடுகளின் காரணமாக பொதுத்தேர்தலை 

நாளை மறுதினம் நடத்துவதற்கான பாதுகாப்பான சூழல் தோற்றம் பெற்றது. புதிய முறையில் தேர்தலை நடத்தும் நிலை காணப்படுகிறது. கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிதல், 1மீற்றர் இடைவெளியை பேணுதல் மற்றும் அடிக்கடி கைகழுவுதல் 

ஆகிய சுகாதார பாதுகாப்பு அம்சங்கள் பரிந்துரை செய்யப்பட்டன இவையனைத்தும் இடம்பெறவுள்ள தேர்தலின் போது செயற்படுத்தப்படும்.

தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ள வாக்காளர்கள் 

14 நாட்கள் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ள வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான சூழலை மத்திய நிலையங்களில் ஏற்படுத்திக் கொடுக்குமாறு குறிப்பிட்டோம். ஆனால் எமது கோரிக்கையில் உள்ள சட்ட சிக்கலை 

சட்டமாதிபர் தெளிவுப்பபடுத்தினார் ஆகையால் 14 தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இம்முறை வாக்களிக்க முடியாது.

வீடுகளில் தனிமைப்ப்படுத்தலுக்கு உட்படுத்தபபட்டுள்ள வாக்காளர்கள் 

 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 14 நாட்கள்  மருத்துவ கண்காணிப்பில் இருந்து வெளியெறி வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்ப்படுத்தலுக்கு உட்படுத்தபபட்டுள்ள வாக்காளர்கள் வாக்களிக்க முடியும். இவர்கள் பிரத்தியேக வாகனங்களில் மாத்திரம் 

 வாக்களிப்பு நிலையங்களுக்கு மாலை 4. மணிக் கு பிறகு செல்ல வேண்டும்.  வாக்களிப்பு மத்திய நிலையங்களில் இவர்களை கண்காணிக்க 2 பொது சுகாதார பரிசோதகர்கள் சேவையில் ஈடுப்படுவாரகள். இவர்களுக்கென்று பிரததியேகமாக ஒரு வாக்குப்பெட்டி ஒதுக்கபட்டிருக்கும். 

இவர்கள் கொவிட்-19 வைரஸ் நோயாளிகள் அல்ல. பிற வாக்காளர்களின் அச்சத்தை போக்கவே இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இராஜாங்கனை மற்றும் லங்காபுர பகுதியில் 1200 பேருக்கு பி. சி. ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இரண்டு பேருக்கு மாத்திரமே கொவிட் தொற்று பரிசோதனையின் பெறுபேறுகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே கொவிட்-19 வைரஸ் தொடர்பில் வாக்காளர்கள் வீண் அச்சம் கொள்ள வேண்டாம் சுதந்திரமான முறையில் சுகாதர பாதுகாப்பு 

அம்சங்களை முழுமையாக பின்பற்றி வாக்களியுங்கள். நாடு தழுவிய ரீதியில் உள்ள வாக்களிப்பு மையங்களிலும் அதனை சூழவுள் ள பகுதிகளிலும் 8000 பேர் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைளில் ஈடுப்படுத்தப்படவுள்ளார்கள். என்றார்.