ராஜபக்ஸக்களின் இராணுவத்தை கண்டு அஞ்சமாட்டோம்..! கொழும்பை முற்றுகையிடுவோம், ஜனாதிபதி, பிரதமருக்கு ஞானசார தேரர் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
ராஜபக்ஸக்களின் இராணுவத்தை கண்டு அஞ்சமாட்டோம்..! கொழும்பை முற்றுகையிடுவோம், ஜனாதிபதி, பிரதமருக்கு ஞானசார தேரர் எச்சரிக்கை..

கொழும்பு துறைமுக கிழக்கு முனைய விவகாரத்தில் உருவாகியிருக்கும் சர்ச்சைக்கு அரசாங்கம் நாளை மறுதினம் செவ்வாய் கிழமைக்குள் அரசாங்கம் தீர்வு வழங்கவேண்டும். தவறினால் ஆயிரக்கணக்கான பௌத்த பிக்குகளுடன் கொழுப்பை சுற்றிவளைப்போம். 

ராஜபக்சக்களின் இராணுவத்தை கண்டு நாங்கள் அஞ்சப்போவதில்லை. என கொழும்பு துறைமுகத்தில் இடம்பெறும் போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தொிவித்த கலகொட அத்தே ஞானசார தேரர் ஜனாதிபதி, பிரதமரை பகிரங்கமாக எச்சரித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ,கடந்த அரசாங்கத்திலும் கிழக்கு முனையம் தொடர்பில் ஒப்பந்தம் செய்வதற்கு முயற்சிக்கப்பட்ட போதிலும் அதனை முதுகெழும்புள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்தார். 

ஆனால் தற்போதுள்ள ஒப்பந்தத்தில் நூற்றுக்கு 51 சதவீதம் இலங்கைக்கும் 49 சதவீதம் ஏனைய கம்பனிகளுக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 51 சதவீதத்திற்குள் இரு கம்பனிகள் உள்ளடங்குகின்றன.அந்த இரு கம்பனிகள் ஜோன்ஸ்டனுடையதா? 

பி.பி.ஜய சுந்தரவினுடையதா? அல்லது நாமலுடையதா? இதனை நாட்டுக்கு வெளிப்படுத்துங்கள். ஏன் அரசாங்கம் இது பற்றி தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்த தாமதிக்கிறது? தேர்தலுக்கு முன்னர் இதனை வெளிப்படுத்துங்கள். 

தேர்தலுக்கு முன்னர் அரசாங்கமும் எதிர்கட்சிகளும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினால் எஞ்சியுள்ள இரு தினங்களில் மக்களுக்கு சுதந்திரமாக சிந்தித்து வாக்களிக்க முடியும்.உள்நாட்டு துறைமுக சேவையாளர்களுக்கு இங்கு அனைத்து சேவைகளையும் 

ஆற்ற முடியுமாக இருக்கின்ற போதிலும் ஏன் வெளிநாட்டுக்கு விற்க முனைகிறீர்கள் ? இதன் பின்னணியில் யார் உள்ளனர்? அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டால் மூன்றில் இரண்டு மாத்திரமல்ல. தற்போதுள்ள பெரும்பான்மையும் இல்லாமல் போகும். 

தேசிய சொத்தினைப் பாதுகாப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர்.இந்த பிரச்சினைக்கு தேர்தலுக்கு முன்னர் அரசாங்கம் பதிலளிக்கவில்லை என்றால் நூற்றுக்கணக்கான பௌத்த மத குருமார்களை ஒன்றிணைந்து 

கொழும்பை சுற்றி வளைப்போம். ராஜபக்ஷக்களின் இராணுவத்திற்கு நாம் அஞ்சப் போவதில்லை. எம்மால் தான் அவர்கள் அந்த நிலைமையில் உள்ளனர் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு