450 மாணவர்கள், 82 ஆசிரியர்கள், 7 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்..! கொரோனா நோயாளியுடன் பழகிய ஆசிரியரால் பீதி..

ஆசிரியர் - Editor
450 மாணவர்கள், 82 ஆசிரியர்கள், 7 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்..! கொரோனா நோயாளியுடன் பழகிய ஆசிரியரால் பீதி..

பொலநறுவை - கிரிதலோகம மாத்திய மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றும் 450 பாடசாலை மாணவர்களும் 82 ஆசிரியர்களும், 7 ஊழியர்களும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர். 

லங்காபுர பிரதேச செயலகத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.குறித்த நோயாளியுடன் நெருங்கி செயற்பட்ட ஆசிரியர் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆசிரியர் இதுவரையில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் கடந்த நாட்களில் பாடசாலைகளில் கற்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். என தெரிவிக்கப்படுகின்றது.

Radio