வெளியே மருத்துவமனை, உள்ளே கருக்கலைப்பு மையம்..! 5 இளம்பெண்கள், 2 கர்ப்பவதிகள் உட்பட 11 பேர் கைது, விசாரணையில் அதிர்ந்துபோன பொலிஸார்..

ஆசிரியர் - Editor
வெளியே மருத்துவமனை, உள்ளே கருக்கலைப்பு மையம்..! 5 இளம்பெண்கள், 2 கர்ப்பவதிகள் உட்பட 11 பேர் கைது, விசாரணையில் அதிர்ந்துபோன பொலிஸார்..

பதிவு செய்யப்பட்ட வைத்தியசாலை என்ற பெயரில் இயங்கிவந்த கருக்கலைப்பு மையம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு 5  இளம்பெண்கள், 2 கர்பவதிகள், 4 ஆண்கள் என 11 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

இந்த சம்பவம் நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. கருக்கலைபபிற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள், மருந்துகள் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

குறித்த கருகலைப்பு நடவடிக்கைக்கு 40 ஆயிரம் ரூபா பெற்றுக் கொள்ளப்படுவதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. பொலிசாரால் தயார்ப்படுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணொருவர் அங்கு சென்று, 

சிகிச்சைக்கான பணம் செலுத்தியதை தொடர்ந்து, பொலிசார் அதிரடியாக கருக்கலைப்பு மையத்திற்குள் நுழைந்தனர்.