சமூக தொற்று தீவிரமடைவதை தடுக்க போராடுகிறோம்..! லங்காபுர பிரதேச செயலக ஊழியரால் சமூக தொற்று ஆபத்தா..? பணிப்பாளர் நாயகம் விளக்கம்...
சமூக மட்டத்தில் சில கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டிருந்தாலும் கூட சமூக தொற்றாக மாறவில்லை. அவ்வாறு மாறாமல் தடுப்பதற்காக சுகாதார அமைச்சு தீவிரமாக போராடிக் கொண்டிருக்கின்றது.
குறிப்பாக கொத்தணியில் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டிருந்தாலும் அவர்களிடமிருந்து சமூக மட்டத்தில் தீவிரமாக பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க கூறியுள்ளார்.
சுகாதார அமைச்சு மற்றும் ஏனைய பிரிவுகள் இணைந்து கொரோனா பரவுவதனை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார பிரிவு, பாதுகாப்பு பிரிவு மற்றும் புலனாய்வு பிரிவு
நோயாளிகளுக்கு அருகில் செயற்பட்டவர்கள் தொடர்பில் செயற்படுவதாக சுகாதார பணிப்பாளர் கூறியுள்ளார். கொரோனா பரவல் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட லங்காபுர பிரதேச செயலகத்தில் சேவை செய்த நபர் இதற்கு முன்னர் கந்தகாடு நோயாளியின் குடும்ப உறுப்பினர்களுடன் நெருங்கி செயற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலைமைக்கமைய அந்த செயலகத்தில் பணியாற்றியவர்கள் பீசீஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். அதற்கமைய நேற்று இரவு 325 க்கும் அதிகமானோர் பீசீஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
லங்காபுர பிரதேசத்திற்கு பயணத்தை தடை மேற்கொள்ளப்படாதென அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றைய தினம் கிடைக்கவுள்ள பீசீஆர் பரிசோதனை முடிவுகளுக்கமைய
இந்த நிலைமை தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.