பாதாள உலககுழு போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய கழுகு..! பொலிஸாரால் மீட்கப்பட்டது, இருவர் கைது..
பாதாள உலக குழுவினர் போதைப் பொருட்களை கடத்துவதற்காக பயன்படுத்தியதாக கூறப்படும் கழுகு ஒன்றை பொலிஸார் மீட்டிருக்கின்றனர்.
மீகொட, நவலமுல்ல பகுதியில் விலங்கு பண்ணையொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பழுந்து மீட்கப்பட்டது.
அத்துருகிரிய பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி, பருந்து மீட்கப்பட்டது. பண்ணையில் கூண்டுக்குள் வைக்கப்பட்டிருந்த கழுகு மீட்கப்பட்டன.
எயார் ரைபிளுடன் இரண்டு பண்ணை தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டனர். பண்ணைக்குள் இலகுவாக நுழைய முடியாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பண்ணையை சுற்றி நாய்கள் பயன்படுத்தப்பட்டன.கழுகு வேறொரு நாட்டிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக
மேலதிக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அதுருகிரியா காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இலங்கைக்குச் சொந்தமில்லாத இந்த பருந்து இனம், 15 கிலோகிராம் வரையான பொருட்களை எங்கும் கொண்டு செல்லும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.